தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில், கருணாநிதி இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அரசியல் தலைவர். அவர் போன்ற சிறந்த ராஜதந்திரியை நாடு இனி பார்க்க முடியாது. தந்தையைப் போன்ற கருணாநிதி இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு’ எனக் கூறியுள்ளார்.