அமெரிக்க வாழ் இந்தியரான ஆதித்யா பம்ஜாயைத் தனியுரிமை மற்றும் சிவில் உரிமைகள் மேற்பார்வை வாரியத்தில் உறுப்பினராக நியமித்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். இந்தக் குழுவில் வரும் 2020, ஜனவரி 29-ம் தேதி வரை ஆதித்யா நீடிப்பார். இவர், விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.