கருப்பை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன்மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். கருப்பை மாற்றுச் சிகிச்சை மூலம் ஆசிய கண்டத்தில் பிறந்த முதல் குழந்தை இது.  `என் அம்மாவின் கருப்பையிலிருந்து நான் பிறந்தேன்; அதே கருப்பையிலிருந்து என் குழந்தையும் பிறந்துள்ளது' என்றார் அப்பெண்.