ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஆலையத் திறக்ககூறி வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்ற வாதம் தமிழக அரசுசார்பில் முன்வைக்கப்பட்டது. இதனை, தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது.