மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது காயங்குளம் கொச்சுண்ணி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 18-ம் தேதி ரீலீஸாக உள்ளது. இதையொட்டி படத்தை புரொமோஷன் செய்யும்விதமாக திருவனந்தபுரம் - கண்ணூர் வரை செல்லும் ஜனசதாப்தி ரயிலில் முழுவதும் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.