மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் எனப் படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நான்கு ஹீரோக்கள் நடித்துள்ளதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.