மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றம் விடுவித்த பிறகும், 2017 செப்டம்பரில் தடையை மீறி பேரணி நடத்தி அரசுக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் ராயப்பேட்டை போலீஸ் மீண்டும் அவரை கைது செய்தனர்.