கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 29 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 12ம் தேதி அங்கு செல்லவுள்ளார் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விமானத்தில் சென்றபடி அவர் வெள்ளச்சேதங்களை பார்வையிடவுள்ளார்.