கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கிய 22 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டனர். ராணுவத்தின் உதவியுடன் கேரள வருவாய்த் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.