கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, 327-வது நாளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலியல் போராளியான முகிலன், இன்று வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தியை காவல்துறை கைதுசெய்ய முயன்றதைக் கண்டிப்பதாக அவர் கூறினார்.