சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த கணேசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜெ.குமார் என்பவரை பொறுப்பு பதிவாளராக நியமித்து துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார். விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கில் கணேசனுக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.