கர்நாடகா அணைகளிலிருந்து விநாடிக்கு 1,43,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.