கேரளாவில் பெய்துவரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.