தென்னிந்தியாவை தலைமையாகக் கொண்டிருக்கும் சத்யம் திரையரங்குகளின் உரிமையை பிவிஆர் சினிமாஸ் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. 850 கோடி ரூபாய்க்கு இந்த டீல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் பிவிஆர் திரையரங்குகளின் எண்ணிக்கை 700ஐக் கடக்கிறது.