நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் தனியார் பங்கு முதலீடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சென்ற ஜூலை மாதத்தில் மொத்தம் 81 தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்களின் வாயிலாக 210 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலத்தில் 1,151 கோடி டாலர் அளவுக்கு  முதலீடு செய்யப்பட்டுள்ளது.