ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வணிக ரீதியான சேவைகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஜியோ நிறுவனம் தொடங்கிய 170 நாள்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த  ஜூன் மாத நிலவரத்தின் படி 215 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று இந்தியாவின் 3-வது மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற நிலையினை எட்டியுள்ளது.