`அனைத்து மதத்தினருக்கும் பொதுவான தாமிரபரணி நதியை, குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமானதாக உருவாக்கும் வகையில் புஷ்கரம் என்கிற வடநாட்டு விழாவை தமிழகத்தில் திணிக்க முயற்சி நடக்கிறது. அதனால் தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது’ என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.