கேரளாவைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்துக்குப் பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்க உள்ளன. சாலைகள் அனைத்தும் மோசமான நிலச்சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் பயணம்செய்து வருமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.