ரபேல் போர் விமானம் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளதாக கூறி, சேலத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தங்கபாலு தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், `மோடியின் தலைமையில் செயல்படும் இந்தப் பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. விரைவில் மக்கள் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஒரு முடிவு கட்டுவார்கள்' என்றார்.