யுவெண்டஸ் அணி பயிற்சி ஆட்டத்தின்போது ரொனால்டோ செய்த குறும்பு சேட்டை, அவரின் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. யுவெண்டர்ஸ் அணியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியில் அவர்களின் பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்தில் நின்று செய்தியாளர் பேசிக்கொண்டிருக்க, அவருக்குப் பின்னர் வந்த ரொனால்டோ சில குறும்பு செய்கைகளை செய்கிறார். இது உலகளவில் பலரை ஈர்த்துள்ளது.