அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வரவுள்ளது லெக்சஸ் ES 2019 கார். இதில் ஒரு சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்தக் காரில் பின்னாடி வரும் வண்டிகளைப் பார்க்க உதவும் சைடு மிரர்களுக்குப் பதிலாகக் கேமராக்கள் இருக்கும். இதிலிருந்து வரும் லைவ் வீடியோ காரினுள் இருக்கும் இரு 5-இன்ச் ஸ்கிரீன்களில் ஒளிபரப்பப்படும்.