சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க  தலைமை அலுவலகத்தில், 2வது நாளாக அக்கட்சியின் உயர்மட்டகுழுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினர். இதையடுத்து கட்சியின் அமைப்பு செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.