கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்புசாமியின் மகன் ராம்குமார். பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர்.  இவர் பல்வேறு கட்ட முயற்சிக்கு பிறகு தற்போது, இந்திய அரசின் பொதுத்துறை  காப்பீட்டு நிறுவனத்தின் தேர்வு எழுதி, அதில் வெற்றியும் பெற்று துணை மேலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.