பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், 'தமிழகத்தில் மூன்று நாள்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. உடனடியாக நிலக்கரி வழங்காவிட்டால் மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும். மின்வெட்டு பிரச்னையை தவிர்க்க மத்திய அரசு உடனடியாக நிலக்கரி வழங்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.