திருமலை திருப்பதியில் கடந்த 13-ம் தேதி மாலை கருடக் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் சர்வ தரிசன டோக்கன்களும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்களும் தலா 7,000 வழங்கப்படும். பக்தர்கள் இதற்குத் தகுந்தவாறு தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.