தஞ்சையை அடுத்த புன்னைநல்லுாரில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில்.  இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த மாதம் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று ஆவணித் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.