புகழ்பெற்ற 'டைம்' இதழ் தற்போது  கைமாறியுள்ளது. சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவன அதிபர் மார்க் பெனியாஃப் அவரின் மனைவி லின்னி  மெர்டித் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து டைம் இதழை 190 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளனர். விளம்பர வருவாய் குறைந்ததும் சர்க்குலேசன் குறைந்ததும் டைம் இதழ் விற்கப்பட காரணம் என்று சொல்லப்படுகிறது.