திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் கடந்த 13 - ம் தேதி தொடங்கி, பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் கருட சேவையில் கலந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட 3 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து மலையப்பசுவாமியின் அருளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.