பிரபல ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டாரின் பங்குகளை வாங்க ஃப்ளிப்கார்ட் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது சில நாள்களில் உறுதிப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. எந்தளவில் பங்குகள் வாங்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஃப்ளிப்கார்ட் முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.