மாமல்லபுரத்தில் கடல் நீரோட்ட திசை மாற்றத்தால் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி இருக்கிறது. இதனால் மாமல்லபுரம் கடல் நீரில் மூழ்கியிருந்த மகிஷாசுரமர்த்தினி குடவரை கடல்நீரின்றி மணல்பரப்புடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மகிஷாசுரமர்த்தினியை வெளிவந்துள்ளதை அறிந்து அந்த இடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.