தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் படித்துறை உள்ளிட்ட 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கால் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 144 வருடங்களுக்குப் பின்னர், இங்கு புஷ்கரம் விழா கொண்டாட இந்து அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அக்.,11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த விழா நடக்க இருக்கிறது.