டெல்லி - பாட்னா Go Air விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென Emergency கதவை திறக்க முயற்சி செய்தார். மற்ற பயணிகள் பயந்துபோய் அவரை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அவரை விசாரித்ததில் `விமானத்தில் முதன்முறையாகப் பயணம் செய்கிறேன். கழிவறை கதவு என்று நினைத்து எமர்ஜென்சி கதவை திறந்துவிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.