குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குருப்பெயர்ச்சி. அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி, அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சிக்கான லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்குகிறது.