நவகிரகங்களில் ஒருவர், சனிபகவான். சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பரிகாரம் செய்வதற்குத் திருநள்ளாறு, குச்சனூர் ஆகிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கு சென்றிட இயலாதவர்கள் முருகனின் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடியில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டு திருநள்ளாறு, குச்சனூருக்கு நிகரான பலனைப் பெறலாம்.