சபரிமலை  ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்த உத்தரவினை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற வலியுறுத்தி ராமேஸ்வரம் கோயில் முன் இந்து மக்கள் கட்சியினர் தேங்காய் உடைக்கும் விநோத போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.