திருமணத்துக்கு வெளியிலான உறவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சாலமன் பாப்பையா விமர்சித்துப் பேசியிருந்ததாக ஒரு பதிவு வைரலானது. இதை மறுத்துள்ள அவர், `எனக்கு முகநூலில் எந்தக் கணக்கும் இல்லை. அந்த முகநூல் பக்கமும் என்னுடையது இல்லை; அந்தக் கருத்தும் நான் சொன்னது இல்லை!’ விளக்கமளித்திருக்கிறார்.