இன்று காலை இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இம்முறை, இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் பின்னர் 15நிமிடம் கழித்து மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.0 என்று ரிக்டரில் பதிவாகியுள்ளது.