ஆன்லைன் தீபாவளி விற்பனையில் அதிரடியாகக் களமிறங்க ஃபிளிப்கார்ட் முடிவுசெய்துள்ளது. 'தி பிக் பில்லியன் டேய்ஸ்' என்ற பெயரில், அக்டோபர் பத்தாம் தேதியிலிருந்து 5 நாள்கள் அதிரடி விற்பனை குறித்து அமிதாப்பச்சன் மூலம் விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இவ்விளம்பரங்களுக்காக 200 கோடி ரூபாய்வரை செலவழிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.