மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காந்திக்கு மரியாதைக்கு அளிக்கும் விதமாக துபாயிலுள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபாவில் மூவண்ண நிறத்தில் காந்தியின் உருவப் படம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில், அவருடைய வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.