நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியில் உள்ள சொபுடான் (Soputan) என்ற எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து 6,000 மீட்டர் உயரத்துக்குத் தொடர்ந்து புகை வெளிவந்துகொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் விளைவாகவே எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிமலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.