சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் விலங்குகளுக்கான ரத்த வங்கி செயல்படுகிறது. ஆசியாவிலேயே அதிக அளவில் விலங்குகளுக்கான ரத்தப் பரிமாற்றம் அதிகம் நடைபெறும் வங்கி இதுதான். இந்தியாவில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட விலங்குகளுக்கான ஒரே ரத்தவங்கியும் இதுதான்.