ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ள விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் விசாரணை பாதிக்கப்படாது என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.