அறிமுகப் போட்டியில் சதம் அடிப்பது ப்ரித்வி  ஷாவுக்கு முதல் முறையில்லை. ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளான ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி தொடர்களிலும் தனது அறிமுகப்போட்டியிலே சதமடித்து அசத்தியுள்ளார் இந்த இளம் புயல். முதலில் கொஞ்சம் பதற்றம் இருந்தது. ஆனால், சிறிது நேரத்திலே இயல்பாக விளையாட ஆரம்பித்துவிட்டேன் என்கிறார்.