மண்டல பூஜை காலமான அக்டோபர் , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், ஜனவரியில் மகர விளக்கு நேரத்திலும் மலையாள வருடப்பிறப்பான விஷூ மாதத்தில் முதல் 5 நாள்கள் மட்டுமே சபரிமலையில் நடை திறக்கப்படும். தற்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, எல்லா நாள்களிலும் கோயில் நடை திறப்பது குறித்து கேரள அரசு ஆலோசனை செய்துவருகிறது.