வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 132 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார்.