கூகுள் இணையதளம் இந்தியப் பள்ளி மாணவர்களுக்கான டூடுல் போட்டியை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்தியாவில் படிக்கிற பள்ளி மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான டூடுலை சமர்ப்பிக்கும் தேதி நாளையுடன் நிறைவடைகிறது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.