புடவை கட்டிய ஓர் இந்தியப் பெண், தன்னிடம் இருக்கும் விளக்கு அணைந்துவிடக் கூடாது எனக் கைகளால் அணைக்கட்டி இருக்கும்படி வரையப்பட்டிருக்கும் இந்தப் படம், Glow of hope என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓவியம், ரவி வர்மா வரைந்தது எனப் பலராலும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஓவியம், ஓவியர் ஹல்டான்கர் என்பவரால் வரையப்பட்டது.