நாகை மாவட்டம் , வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. செவ்வாய் ஸ்தலாமான இந்தக் கோயிலின் மேற்கு கோபுர வாசல் இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. பக்தர்களின் நலன்கருதி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.