வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 649 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்களும் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ், 2 வது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவே.