விஜய் ஹசாரே தொடரில் முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார் உத்தரகாண்ட் அணி வீரர் கரண்வீர் கௌஷால். சிக்கிம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கரண்வீர் 135 பந்துகளில் 202 ரன்கள் எடுத்தார். முன்னதாக மும்பை அணி வீரர் ரஹானே எடுத்திருந்த 187 ரன்களே, விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.